Latestமலேசியா

ஒரு கால் ஊன்றுகோல் உதவியோடு 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவன் நெட்டிசன்களின் மனதில் இடம்பெற்றான்

கோலாலம்பூர், ஆக 29 – பகாங் ஜெராண்டுட்டில் சிறப்பு மாணவர்களுக்கான தனது பள்ளியின் விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் ஊன்று கோலின் உதவியோடு மனம் தளராமல் கலந்து கொண்ட இரண்டு கால் இல்லாத சிறுவன் போட்டியில் கடைசி இடத்தை பெற்றபோதிலும் அச்சிறுவனின் உறுதியும் நம்பிக்கையையும் நெட்டிசன்களின் பாராட்டை பெற்றது. 11 வயது சிறுவன் Aqil Naufal zahiran 100 மீட்டர் ஓட்டத்திற்காக முழு கவனத்தோடு உன்னிப்பாக காத்திருப்பதை இதுவரை 650,000த்திற்கும் மேற்பட்டோர் கண்டு பிரமித்தனர்.

Aqil லுடன் போட்டியில் கலந்துகொண்ட இதர நான்கு போட்டியாளர்கள் 100 மீட்டர் ஓட்டத்தை விரைவாக ஓடிவிட்டு வெளியேறிய போதிலும் அச்சிறுவன் தொடர்ந்து ஊன்று கோலுடன் ஓடி முடித்தான். அக்கிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவனது ஆசிரியை என நம்பப்படும் ஒரு பெண்ணும் திடலுக்கு வெளியே ஓடியதையும் காண முடிந்தது. இரு சகோதரர்களில் மூத்தவரான aqil தமது காலில் கிருமி தாக்கியதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு தனது இரண்டு கால்களையும் இழந்ததாக தெரிவித்தான்.

அதோடு போட்டியின்போது பலரது பார்வை தம்மீது இருந்தது குறித்து சற்று பதட்டத்திற்கு உள்ளானதை Aqil ஒப்புக்கொண்டான். இந்த போட்டிக்காக நான்கு நாள் பயிற்சியை மேற்கொண்டதோடு போட்டியை முடித்துவிட வேண்டும் என்ற உறுதியை கொண்டிருந்ததாக அவன் தெரிவித்தான். இறுதியில் போட்டியை முடித்தபோது தனது ஆசிரியை பாராட்டியதால பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக Aqil கூறினான்.

Aqil தனியாக ஓடுகிறான் என்ற உணர்வினால் அவன் சோர்வடையாமல் இருப்பபதற்கு உற்சாகம் வழங்க வேண்டும் என்பதற்காக திடலுக்கு வெளியே தாமும் ஓடியதாகவும் போட்டியை வெற்றிகரமாக அம்மானவன் முடித்தது குறித்து மகிழ்ச்சி அடைவதாக அவனது ஆசிரியை Ms Intan Zulakha Jusoh தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!