புக்கிட் கந்தாங், பிப் 25 – லோ சியூவ் ஹோங்கின் (Loh siew hong ) 3 பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், அடுத்த வாரம் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவிருப்பதாக, சமய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் டத்தோ இட்ரீஸ் அஹ்மாட் தெரிவித்தார்.
நாட்டில் தொடரும் ஒரு தலைப்பட்ச மத மாற்றம் தொடர்பில் ஒரு தீர்வு காண அந்த சந்திப்பு நடத்தப்படும். அந்த சந்திப்பில் சட்ட நிபுணர்கள், விரிவுரையாளர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் இடம்பெற்றிருப்பர் என டத்தோ இட்ரீஸ் அஹ்மாட் கூறினார்.