கோலாலம்பூர். மார்ச் 2 – ஒரு தலைப்பட்சமான மத மாற்றம் தம்மைப் பொறுத்தவரை ஏற்புடையதாகவோ அல்லது பெருமைப்படத்தக்க ஒன்றாக இல்லையென முன்னாள் சட்ட அமைச்சரும் Padang Rengas நாடாளுமன்ற உறுப்பினருமான Nazri Aziz தெரிவித்தார். ஒரு முஸ்லிம் என்ற முறையில் வயதுக் குறைந்த பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்படுவது பெருமைப்படக்கூடியதாக இல்லை.
ஒருதலைப்பட்சமாக தங்களது வயது குறைந்த பிள்ளைகள் இஸ்லாமிய சமயத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டதால் Loh Siew Hong மற்றும் M.Indira Gandhi ஆகிய இருவரும் அடைந்த வேதனைகளையும் இன்று நாடாளுமன்றத்தில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது நஸ்ரி சுட்டிக்காட்டினார்.
என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். பெற்றோர் என்றால் தந்தையும் தாயும்தான். அவர்களில் ஒருவர் மட்டுமே ஒருதலைப்பட்சமாக பிள்ளைகளை மதமாற்றம் செய்வதற்கு அனுமதியளிப்பது நியாயமானதாக இல்லை. நீங்கள் விரும்பாததை மற்றவர்கள் மீது தினிக்காதிர்கள் என நஸ்ரி வலியுறுத்தினார்.