
கோலாலம்பூர், நவம்பர்-8 – ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், 2026 வாக்கில் நாடு முழுவதும் தடை செய்யப்படலாம்.
இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மை அமைச்சு, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அதனைக் கோடி காட்டியது.
அக்கொள்கை ஏற்கனவே சபாவின் கோத்தா கினாபாலு, நெகிரி செம்பிலான், பினாங்கு போன்ற இடங்களில் நடைமுறையில் உள்ளதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
கூட்டரசு பிரதேசத்திலும் அத்தகையப் பிளாஸ்டிக் பயன்பாடுகள் பெருமளவில் குறைந்து மட்கும் பிளாஸ்டிக் பைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க, அவற்றுக்கு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கும் பரிந்துரையும் ஆராயப்பட்டு வருகிறது.
பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில், தொழில்துறையினர் அரசு சார்பற்ற அமைப்புகள் உள்ளிட்ட தரப்புகளுடன் தொடர் கலந்தாய்வு நடத்தப்படுமென்றும் அமைச்சு கூறியது.