ஷா ஆலாம், நவம்பர்-20, நம்மூர் அலிபாபா பூஜாங் லாப்போக் படத்தில் வருவது போல் கொள்ளைக் கும்பலொன்று ஒரு லாரியையே கொண்டு வந்து தொழிற்சாலையைக் கொள்ளையிட்டச் சம்பவம் சிலாங்கூர், குவாலா லங்காட், தெலோக் பாங்லீமா காராங்கில் அரங்கேறியுள்ளது.
நவம்பர் 9-ம் தேதி அங்குள்ள உலோகத் தொழிற்சாலைக்கு லாரியில் வந்திறங்கிய 16 பேரடங்கிய கும்பல், உலோகங்களையும் பழைய சாமான்களையும் அள்ளிப் போட்டுச் சென்றது.
எனினும், தொழிற்சாலை உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 24 மணி நேரங்களுக்குள் மொத்த கும்பலும் போலீசிடம் சிக்கியது.
அவர்களில் 14 பேர் உள்ளூர் ஆடவர்கள், எஞ்சிய இருவர் சீன பிரஜைகள் ஆவர்.
அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 20 உயிருள்ள தோட்டாக்கள், ஒரு பாராங் கத்தி, ஒரு கார் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றவியல் சட்டம் மற்றும் அபாயகர ஆயுதச் சட்டத்தின் கீழ் அக்கும்பல் விசாரணையை எதிர்நோக்கியுள்ளது.