மே 3 – ஆப்பிள் நிறுவனம், கடந்த ஓராண்டு காலமாக மிகப் பெரிய விற்பனை சரிவை பதிவுச் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதனால், அந்த தொழிநுட்ப ஜாப்பானின் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை முறியடிக்க ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் முயன்று வருகிறார்.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் அல்லது முதல் காலாண்டில், ஆப்பிளின் விற்பனை நான்கு விழுக்காடு வரையில் சரிவு கண்டு, ஒன்பதாயிரத்து 80 கோடி அமெரிக்க டாலாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
உலகளவில், ஐபோன்களுக்கான தேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் அந்த சரிவு பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், கோவிட் தொடர்பான விநியோக இடையூறுகளால் அந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் புதிய தயாரிப்புகள், மற்றும் AI – செயற்கை நுண்ணறிவில் செய்யப்படவிருக்கும் முதலீடுகள் ஆகியவற்றால், வரும் மாதங்களில் ஆப்பிளின் விற்பனை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் எனவும் டிம் குக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகளவில், இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில், “ஸ்மார்ட்போன்” அல்லது விவேக கைப்பேசி ஏற்றுமதி பத்து விழுக்காடு உயர்ந்துள்ளது. நீண்ட மந்தமான காலத்திற்கு பிறகு அந்த வளர்ச்சி பதிவுச் செய்யபட்டுள்ளதாக, Canalys ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், அதே காலகட்டத்தில், ஆப்பிள், ஐபோன் காலாண்டு விற்பனை பத்து விழுக்காடுக்கும் அதிகமாக குறைந்துள்ளது. ஐரோப்பாவைத் தவிர உலகளவில் இதர அனைத்து வட்டாரங்களிலும் அதன் விற்பனை சரிந்துள்ளது. குறிப்பாக, அந்நிறுவனத்தின் முக்கியமான சந்தையாக திகழும் சீனாவில் மட்டும் எட்டு விழுக்காடு வீழ்ச்சி கண்டுள்ளது.
இருப்பினும், சீனாவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் உள்நாட்டு தயாரிப்பான Huawei கைப்பேசிகளிடமிருந்து வரும் போட்டி ஆகியவற்றால் தான் அந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், டிம் குக் தற்காத்து பேசியுள்ளார்.
ஆப்பிள் அதன் “ஆப் ஸ்டோருக்கு” விதிக்கப்படும் கட்டணங்களுக்காக, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், சட்டப் போராட்டங்க்களை எதிர்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.