ஜொகூர் பாரு, ஆகஸ்ட்-30 – ஜொகூர் பாரு, லார்கின் , ஜாலான் லங்காசுகாவில் சாலையின் எதிர்திசையில் வாகனமோட்டியதாக சிக்கிய e-hailing ஓட்டுநர், சாலை இருட்டாக இருந்ததால் தெரியாமல் நுழைந்து விட்டதாக சாக்குப் போக்குக் கூறியுள்ளார்.
அச்சம்பவத்தின் வீடியோ நேற்று பிற்பகல் முதல் வைரலானதை அடுத்து, 50 வயது அந்த உள்ளூர் ஆடவரை போலீஸ் அடையாளம் கண்டு விசாரித்த போது அவர் அக்காரணத்தைக் கூறினார்.
சாலையின் இரட்டைக் கோட்டை மீறியதையும் ஒப்புக் கொண்டார்.
எதிரில் வந்த வாகனம் அதிக ஒளியைப் காட்டி எச்சரித்த போதே, தான் எதிர்திசையில் போய்க் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தாராம்.
சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அவ்வாடவருக்கு சம்மன் வெளியிடப்பட்டுள்ளது.
தான் செல்லும் பாதையில் Proton Saga கார் எதிரில் வந்ததால் அதிர்ச்சியடைந்த Myvi காரோட்டுநர், சாலையோரமாக தனது காரை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைக்கு ஆளானதை, வைரலான 1 நிமிட வீடியோவில் காண முடிந்தது.