
போபால் , ஜன 13 – மத்திய பிரதேசத்தில் போபாலில் நிதி நெருக்கடியினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி விஷம் உட்கொண்டதோடு அவர்களது நான்கு பிள்ளைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தனர். இந்த சம்பவத்தில் 8 வயது மகள் மரணம் அடைந்தார். அந்த தம்பதியரின் 15,10 மற்றும் 12 வயதுடைய மூன்று பிள்ளைகள் கவலைக்கிடமாக உள்ளனர். நிதி நெருக்கடியினால் 40 வயதுடைய குத்தகையாளரான Kishore Jatav தமது வேலையை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு செய்ததாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் டாக்டர் Narottam Mishra தெரிவித்தார்.