Latestஉலகம்

கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிப்பு; அதிர்ச்சியில் இங்கிலாந்து மக்கள்

லண்டன், மார்ச் 23 – வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தமக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டிப்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

அதற்கான கிமோதெரப்பி சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதால், தமக்கு தனிமைத் தேவைப்படுவதாக 42 வயது கேட் சொன்னார்.

எனினும் அவரின் புற்றுநோய் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

கேட்டின் உடல் நிலை குறித்து மாதக் கணக்கில் வதந்திகள் நிலவி வந்த நிலையில், வீடியோ வாயிலாக அவரே அத்தகவலைத் தெரிவித்தார்.

இது இங்கிலாந்து மக்கள் மட்டுமின்றி உலகளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதைத் தவிர்த்து வந்த கேட், ஜனவரியில் வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்ட போதே சந்தேகம் எழுந்தது.

பின்னர் கடந்த வாரம் தான் தனது கணவரும் பட்டத்து இளவரசருமான வில்லியமுடன் அவர் பொதுவெளியில் காணப்பட்டார்.

அதன் வீடியோக்கள் வைரலாகி, கேட்டின் உடல் ஆரோக்கியம் குறித்த வதந்திகளுக்கு அது முற்றுப் புள்ளி வைத்திருப்பதாக அனைவரும் எண்ணியிருந்த நிலையில், கேட் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

கேட்டின் மாமனாரும், பிரிட்டன் அரசருமான மன்னர் மூன்றாம் சார்லசுக்கு, அண்மையில் தான் புரோஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!