
ஜெம்போல், ஆக 20 – Jempol , Felda Palong 6 இல் இந்தோனேசியர்கள் என நம்பப்படும் பாராங் ஏந்திய நால்வர் ஒரு வீட்டில் புகுந்து ஐவர் கொண்ட குடும்ப உறுப்பினர்களை கட்டிப்போட்டபின் அவ்வீட்டிலிருந்து ரொக்கம், நகைகள் உட்பட 20,000 ரிங்கிட் பொருட்களை கொள்ளையிட்டனர். அந்த சம்பவத்திபோது 60 வயதுடைய ஒரு தம்பதியரும் அவர்களது பிள்ளைகளும் அவ்வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துபோது அவ்வீட்டின் பின்புறப் பகுதியில் பூட்டப்படாத கதவு வழியாக அந்த கொள்ளையர்கள் நுழைந்ததாக Jempol மாவட்ட போலீஸ தலைவர் Hoo Chang Hook தெரிவித்தார். முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் 700 ரிங்கிட் ரொக்கம், இரு கை தொலைபேசிகள் நகைகள் மற்றும் இதர பல பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றதாக Hoo Chang Hook கூறினார்,