வேல்ஸ், பிப் 14- பிரிட்டனுக்கு வடக்கேயுள்ள வேல்ஸ் நாட்டில் ஒரே சமயத்தில் 200க்கும் மேற்பட்ட மைனாக்கள் கொத்து கொத்தாக மடிந்த காட்சியைக் கண்டு அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று Pembrokeshire மாகாணத்தில் Waterston மற்றும் Hazelbeach கடற்கரை பகுதிகளுக்கு அருகில் அந்தப் பறவைகள் திடிரென ரத்தக் காயங்களுடன் வானத்திலிருந்து ஒவ்வொன்றாக கீழே விழுந்தன.
எனினும், அவை மடிந்ததற்கான உண்மை காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், அன்றைய தினம் வானில் மிகவும் சத்தமான விசித்திரமான ஒலியைக் கேட்டதாகவும் அதன்பிறகே அந்த மைனா பறவைகள் மடிந்து விழுந்ததாகவும் பறவை நிபுணர் Dominic Couzens கூறினார்.