Latestமலேசியா

ஒரே பெண்ணை விரும்பியதால் மாணவருக்கு கல்லடி ; மண்டையோட்டில் விரிசல்

குவா மூசாங், பிப் 11 – ஒரே பெண்ணை விரும்பியதால் , பள்ளிக்கூட மூத்த மாணவரால், மண்டையோட்டில் விரிசல் ஏற்படும் அளவிற்கு, நான்காம் படிவ மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் .

கிளந்தான், குவா மூசாங்கில் உள்ள பள்ளிக்கூடமொன்றில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில், தாக்கப்பட்ட மாணவரின் இரு கால்களும், முதுகுப் பகுதியும் வீங்கியதாக , குவா மூசாங் ( Gua Musang ) மாவட்ட போலீஸ் தலைவர் Sik Choon Foo தெரிவித்தார்.

தற்போது, குவா மூசாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மாணவரின் தலையை , மூத்த மாணவர்கள் சேர்ந்து கல்லால் அடித்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!