
புது டில்லி, மார்ச் 15 – 3 வருடங்களாக தான் நேசித்து வந்த இரு காதலிகளை ஒரே மேடையில் கரம் பிடித்திருக்கின்றார் இந்தியா, தெலுங்கானாவைச் சேர்ந்த எம். சத்திபாபு என்பவர்.
சத்திபாபு யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என அவர் காதலித்து வந்த இரு பெண்களின் குடும்பத்தாருக்கும் இடையில் சண்டை சச்சரவு ஏற்பட்டது.
பின்னர், இரு மணப்பெண்களின் பெயர்களையும், திருமண அழைப்பிதழில் அச்சிட்டு, இரு குடும்பத்தாரின் சம்மதத்தையும் பெற்று விட்டார் அந்த கில்லாடி ஆடவர்.