
புனித ரமலான் மாதத்தின் உன்னத சூழலில், வணக்கம் மலேசியா அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை, சமூக அமைப்புகள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகளுக்காக ஒரு சிறப்பு நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள இந்தியா கேட் உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வணக்கம் மலேசியாவுடன் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்ட முக்கிய அமைப்புகளைச் சேர்ந்த தரப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
இது வெறும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மலேசியாவின் பன்முகத்தன்மை, பரஸ்பர மரியாதை, மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாகவும் அமைவதாக வணக்கம் மலேசியா நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி கூறினார்.
40-க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, புதிய ஒத்துழைப்புகளுக்கான ஒரு தொடக்கமாக அமையும் எனவும், சமூகத்தின் நலனுக்காக சேர்ந்து பணியாற்றும் ஒரு சக்தியாக இது உருவாக வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மலேசிய இலக்கவியல் அமைச்சு, மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டு கழகம் (Matrade), மனிதவள மேம்பாட்டு கழகம் (HRDCORP), மலேசிய பத்திரிகை கழகம் (MPI), Legendary Riders Club
மற்றும் பல நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.