
கோலாலம்பூர், ஜன 1 – இன்று மலர்ந்திருக்கும் 2023 புத்தாண்டில் நாட்டின் ஒற்றுமையும், ஐக்கியமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக மாட்சிமை தங்கிய பேரரசர் Al Sultan Abdullah மற்றும் பேரரசியார் Tuanku Hajah Maimunah தங்களது வாழ்த்து செய்தியில் தெரிவித்துக் கொண்டனர். அனைத்து மக்களும் மற்றும் நாடும் தொடர்ந்து சுபிட்டசமாக இருக்க வேண்டுமென பேரரசர் தம்பதியர் பிரார்திப்பதாக இஸ்தானா நெகாராவின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுளளது.