Latestமலேசியா

ஒற்றுமை அரசாங்கத்தினால் மட்டுமே பிரச்னைகளை தீர்க்க முடியும்; இந்தியர்களுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து

உலு சிலாங்கூர், மே 7 – மக்கள் பிரச்னைகளை தீர்க்க ஒற்றுமை அரசாங்கம் உதவும் என்பதால் Kuala Kubu Baharu வில் உள்ள இந்திய சமூகத்தினர் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

DAPயின் Pang Sock Tao வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த விக்னேஸ்வரன், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் பக்கத்தான் ஹராப்பான் இருப்பதால் இந்திய சமூகத்திற்கு அதிகம் நன்மைகளை செய்ய முடியும் என்றார். அதே வேளையில் பெரிக்காத்தான் நேசனல் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்காததால் அதன் வேட்பாளர் Khairul Azhari Saut தேர்ந்தெடுக்கப்பட்டால் சமூகத்திற்கு அதிகம் செய்ய முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரச்னைகளைத் தீர்க்க, உங்களுக்கு அரசாங்கத்தின் பிரதிநிதி தேவை. எனவே, வாக்காளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரை தேர்வு செய்வதே சிறந்ததாக இருக்கும் என நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விக்னேஸ்வரன் தெரிவித்தார். குறைந்தபட்சம் 80 விழுக்காடு இந்திய சமூகத்தினரின் ஆதரவை ஒற்றுமை அரசாங்கம் பெறமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மே 11-ம் தேதி நடைபெறும் கோலா குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் Pang , Khairul, Party Rakyat Malaysia வின் Hafizah Zainuddin மற்றும் சுயேட்சை வேட்பாளர் Nyau Ke Xin ஆகியோருக்கிடையே நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!