Latestமலேசியா

ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவை மூடா மீட்டுக்கொண்டு 3ஆவது அணியாக செயல்படும்; சைட் சாடிக் அறிவிப்பு

கோலாலம்பூர், செப் 11 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமயிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதாதவை மீட்டுக்கொண்டு விட்டதாக Muda கட்சி அறிவித்திருக்கிறது. அதோடு இனி தனித்து மூன்றாவது அணியாக செயல்படப்போவதாக அக்கட்சியின் தலைவரான Syed Saddiq Syed Abdul Rahman அறிவித்திருக்கிறார். Yayasan Akalbudi வழக்கில் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மூடா இந்த முடிவை எடுத்துள்ளதாக Syed Saddiq கூறியுள்ளார்.

கொள்கையற்ற முடிவுகளை நாங்கள் தொடரந்து ஏற்க முடியாது அல்லது இதனை சகித்துக்கொள்ள முடியாது என தமது டுவிட்டரில் Syed Saddiq பதிவிட்டுள்ளார். எனது கொள்கைகளை இழந்துவிடுவதைவிட நான் தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லையென என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அதே வேளையில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் மூடா இணையாது. அரசியலில் தொடர்ந்து மூன்றாவது தரப்பாக மூடா இருந்துவரும் என Syed Saddiq கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!