Latestமலேசியா

ஒற்றுமை அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு வலுவாக நிலைத்திருக்கும் – அன்வார் நம்பிக்கை

ஷா அலாம் , மார்ச் 18 – தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தொடர்ந்து வலுவாக இருந்துவரும் என்பதோடு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அரசாங்கம் அமைப்பதற்கு தமக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளின் ஒத்துழைப்பு வலுவாக இருப்பதால் இந்த நம்பிக்கையை கொண்டிருப்பதாக ஷா அலாம் மெலாவாத்தி அரங்கில் பி.கே.ஆர் சிறப்பு மாநாட்டில் உரையாற்றியபோது அன்வார் கூறினார். எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே அரசாங்கமாக நாம் வலுவாக இருப்பதற்கு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அப்போதுதான் நாட்டை மேம்படுத்தி மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என அவர் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு மிரட்டலாக இருக்கும் முயற்சிகள் இருந்தாலும் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் வலுவுடன் இருக்கும் என அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!