
கோலாலம்பூர், மார்ச் 28 – எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தலில் கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநில அரசாங்கங்கள் ஒற்றுமை அரசாங்கத்திடம் வீழ்ந்தால் அந்த மூன்று மாநிலங்களின் அரசாங்கத்திற்கு தேசிய முன்னணி தலைமையேற்கும். அதோடு தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் Menteri Besar-ராக நியமிக்கப்படுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் அனுமதிக்கும் என Amanah தொடர்பு இயக்குனர் காலிட் சமாட் தெரிவித்தார்.
அதே வேளையில் பக்காத்தான் ஹராப்பானுடன் நடைபெறும் கூட்டுக் குழு கூட்டத்தில் மெந்திரிபெசார் பதவிக்கு சாத்தியமான வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள் என அவர் கூறினார். சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கில் பக்காத்தான ஹராப்பான் உறுப்புக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மாநில அரசாங்கங்களில் தலைமையேற்பார்கள் என காலிட் கூறினார்.