ஒற்றைக் கையுடன் ஒலிம்பிக்கில் அசத்தும் டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள்!
பிரான்ஸ், ஆகஸ்ட் 7 – 33ஆவது பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒற்றைக் கையுடன் விளையாடி பார்வையாளர்களை அசரவைத்துள்ளார் பிரான்ஸைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் நட்சத்திரமான புருனா அலெக்ஸாண்ட்ரே (Bruna Alexandre).
புருனா ஏற்கனவே 2020ஆம் ஆண்டில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்றவர்.
தற்போது, ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதல் பாரா-தடகள வீராங்கனை என்ற பெருமையையும் தன் வசமாக்கியுள்ளார்.
29 வயதான புருனா அலெக்ஸாண்ட்ரே, த்ரோம்போசிஸ் (thrombosis) என்றழைக்கப்படும் இரத்தம் உறைதல் நோயால் பதிக்கப்பட்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது, அவரது வலது கை துண்டிக்கப்பட்டது.
இதனிடையே, ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஒரே பாராலிம்பிக் வீராங்கனை புருனா மட்டுமல்ல.
கையில் பக்கவாதம் ஏட்பட்டு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மெலிசா தாப்பர் (Melissa Tapper) என்ற வீராங்கனை தன்னுடைய மூன்றாவது ஒலிம்பிக்கில் பங்கேற்று அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.