Latestமலேசியா

ஒலிப்பெருக்கி திருடியதாக ஆடவர் கொலை; தந்தை உட்பட இரு மகன்கள் கைது

பெட்டாலிங் ஜெயா, நவ 26- ஈப்போ, Ashby சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட கைகலப்பில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, கொலை செய்யப்பட்ட ஆடவர், தாக்கியவர்களில் ஒருவரது ஒலிப்பெருக்கியை திருடி, அதனை சத்தமாக வைத்ததாக நம்பப்படுகிறது. அதனால் அவர்களுக்கு இடையில் சண்டை மூண்டு, பின்னர் அந்த ஆடவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் Mior Faridalathrash தெரிவித்திருந்தார்.

நேற்று காலை 9.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தையடுத்து, 60 வயதான முதியவரும் அவரின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அம்மூவரையும் இன்று தொடங்கி 7 நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கும்படி ஈப்போ நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!