
பெட்டாலிங் ஜெயா, ஜன 31 – பெட்டாலிங் ஜெயா , Jalan Tandan, செக்சன் 51 இல் ஓடிக்கொண்டிருந்த காரில் தீப்பற்றியதில் அக்கார் ஓட்டுனர் தீக்காயங்களுக்கு உள்ளானார். நேற்றிரவு மணி 9.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் புரோட்டோன் சாகா காரை ஓட்டிச்சென்ற 66 வயதுடைய K. Karungarang தீக்காயங்களுக்கு உள்ளானார். தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற ஏழு தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியோடு அக்கார் ஓட்டுனரை மீட்டனர். அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் செல்லப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்புத்துறையின் இயக்குனர் டத்தோ Norazam Khamis தெரிவித்தார்.