Latestமலேசியா

ஓடுபாதையை விட்டு விலகி தடம் புரண்டது இலகு ரக விமானம்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 8 – லங்காவி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும் போது Diamond DA-42D ரக பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகியது.

நல்ல வேளையாக இச்சம்பவத்தில் அந்த இலகு ரக விமானத்தின் இரு விமானிகளும் காயமேதுமின்றி உயிர் தப்பியதாக மலேசிய பொது வான் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் செஸ்டர் வூ (Chester Voo) தெரிவித்துள்ளார்.

நண்பகல் 12 மணிக்குப் பிறகு அப்பயிற்சி விமானம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ஓடுபாதை மீண்டும் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது. விமான நிலையத்தின் பாதுகாப்புத் தன்மையை உறுதிச் செய்ய, விமான ஓடுபாதை முழுமையான பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதாக கேப்டன் செஸ்டர் வூ கூறினார்.

மலேசிய போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள ஆகாய விபத்து மீதான விசாரணைப் பிரிவு, இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும். அதோடு விமானப் பயிற்சியின் போது பின்பற்றப்பட வேண்டிய அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் மறு ஆய்வு செய்யப்படவிருப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!