
சிலாங்கூர், ஜன 24 – பெட்டாலிங் ஜெயாவில், பயணிக்கும் வாகனம் ஒன்றின் Sunroof வாயிலாக குழந்தை ஒன்று நிற்கும் காணொளி வைரலாகியுள்ளதை தொடர்ந்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நள்ளிரவு மணி 12.15 வாக்கில் அந்த காணொளியை போலீசார் அடையாளம் கண்டதாக, பெட்டாலிங் ஜெயா OCPD அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் பாக்ரூடின் தெரிவித்தார்.
@nabilahroslan எனும் ட்விட்டர் கணக்கில் அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் X70 வாகனத்தின் sunroof வழியாக, குழந்தை ஒன்று நிற்று எட்டி பார்க்கும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.