
புத்ரா ஜெயா மே 26- நடந்து முடிந்த சீ விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பேராவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷெரின் வெல்லபோய்க்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வி .சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்திற்காக தயாராகிவரும் அவருக்கு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கவிருக்கும் நான்கு லட்சம் ரிங்கிட் உதவித் தொகை பெரும் ஊக்குவிப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார். அதற்கு முன்னதாக எதிர்வரும் அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் பதக்கம் வெல்ல போராட வேண்டும். அதற்கு அவருக்கு கடுமையான பயிற்சியும் உழைப்பும் தேவைப்படுகிறது என்று சிவக்குமார் தெரிவித்தார்.