மைசூர், பிப் 17 – தற்போது பல துறைகளில் மனிதர்களை ஓரங்கட்டி விட்டு, அவர்களது வேலைகளை ரோபோக்கள் செய்யத் தொடங்கியுள்ளன.
அவ்வகையில், மைசூரில் பிரபல ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற பயன்படுத்தப்பட்டிருக்கும் ரோபோ வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
அந்த ரோபோ பட்டுச் சேலையுடன் வாடிக்கையாளார்களுக்கு உணவை பரிமாறுவதே அதற்கு காரணமாகும்.
என்னதான் மனிதர்களைப் போன்று இன்முகத்துடன் வரவேற்று பேசும் சேவை ரோபோக்களிடம் இல்லையென்றாலும், தொழிற்துறைகளில் தற்போது ரோபோக்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதாக கூறுகிறார் ஓட்டல் உரிமையாளார்.
அந்த ரோபோவை ஓட்டல் உரிமையாளர் இரண்டரை லட்சம் ரூபாயிற்கு வாங்கியுள்ளார்.