
ஜப்பான், ஆகஸ்ட் 1 – ஜப்பானை சேர்ந்த ஒருவர், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து ‘ஓநாய்’ உருவத்திற்கு மாறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொறியாளரான அந்த இளைஞர், சிறுவயதில் இருந்து கண்ட கனவை நனவாக்க 3 மில்லியன் யென் அதாவது ஒரு லட்சத்து 9 ஆயிரம்
ரிங்கிட்டை செலவு செய்திருக்கிறார்.
ஆடை வடிவமைப்பாளர் ஒருவரை அணுகிய பின்னர் 50 நாட்கள் கடின உழைப்பின் மூலம் இந்த ஓநாய் ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
“வெறும் ஆடைதானே.. வேண்டும் என்றால் மனித உருவத்திற்கு மாறிக்கொள்வார்” என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் தற்போது வரை ஓநாய் உருவத்திலேயே அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறாராம் அந்த இளைஞர்.
ஓநாய் போன்று மாறினாலும் இயற்கையை ஏமாற்ற முடியாது என்று ஒருபுறமும், கனவை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் சென்றதற்கு பாராட்டுக்கள் என்று மற்றொரு புறமும், சமூக வலைதளங்களில் ஓநாய் மனிதரின் செயலுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.