ரியோ டி ஜெனிரோ, மே-13, பிரேசில் நாட்டு பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 143-ராக அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை மட்டும் அங்கு எழுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
Rio Grande do Sul எனும் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையில் இன்னும் 125 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் கூறினர்.
ஆறுகளில் நீர் மட்டம் அபாய அளவில் இருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அம்மாநிலத்தைத் தாக்கிய பெருவெள்ளத்தில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.
இதையடுத்து பேரிடர் அவசர நிதியாக பிரேசிலிய அரசாங்கம் 234 கோடி டாலரை அறிவித்தது.
இயற்கையின் சீற்றத்தில் அழிந்தவற்றை மீண்டும் நிர்மாணிப்போம் என அந்நாட்டு அதிபர் Luiz Inacio Lula da Silva மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
இந்த இக்கட்டான சூழலில் பிரேசில் அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் Joe Biden-னும் அறிவித்துள்ளார்.
பருவ நிலை மாற்றம் காரணமாகவே அந்த பிரேசிலிய மாநிலம் வரலாறு காணாத பெருவெள்ளத்தைச் சந்தித்திருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.