
புத்ராஜெயா, மார்ச் 28 – எனது சேவை நாட்டு மக்களுக்கு இன்னும் தேவைப்படுவதால் , தாம் தொடர்ந்து அரசியலில் ஈடுபடப் போவதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹம்மட் கூறியிருக்கிறார்.
நாட்டின் நன்மைக்காக எனது ஆலோசனையை நாடி வருபவர்கள் அல்லது உதவி கேட்டு வருபவர்களை, என்னால் மறுக்க இயலாது. நான் ஓய்வெடுக்கப் போகிறேன் என்பதற்காக அவர்களைத் திருப்பு அனுப்பி வைக்க முடியுமா என அவர் வினவினார்.
இனி அரசியலில் ஈடுபட வேண்டாமென பொருளாதார நிபுணர் Jomo Kwame Sundram தம்மை ஆலோசித்திருந்ததாக கூறப்பட்டது தொடர்பில், மகாதீர் அந்த பதிலை வழங்கியிருக்கிறார்.