கோலாலம்பூர், மார்ச் 2 – ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இனி இ.பி.எப் சந்தாதாரர்கள் I -Ceria போன்ற எந்தவொரு திட்டத்திலும் தங்களது பணத்தை மீட்பதற்கு பரிந்துரை வழங்கும் ஆலோசனையை இ.பி.எப் நிறுவனம் கொண்டிருக்கவில்லை.
வயதான காலத்தில் இ.பி.எப் சேமிப்பு பணத்தை சந்தாதாரர்கள் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதில் அந்த நிதி நிறுவனம் இனி முன்னுரிமை வழங்கும் என இ.பி.எப்பின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ Amir Hamzah Azizan கூறினார்.
I-Lestari, I-Sinar மற்றும் I-Citra ஆகிய மூன்று திட்டங்கள் மூலம் இ.பி.எப் பணத்தை மீட்கும் கால அவகாசம் முடிந்துவிட்டது. ஓய்வு பெற்ற பிறகு சந்தாதாரர்களுக்கு போதுமான சேமிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இனி இ.பி.எப் உறுதியாக இருக்கும் என Amir Hamzah Azizan தெரிவித்தார்.