
சென்னை, ஜன 5 – 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித், விஜய் நடிக்கும் படங்கள், இந்த பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் ஜனவரி 11-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல , இந்தியாவிற்கு வெளியிலும் அஜித்திற்கும் , விஜயிற்கும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், எந்த படம் ஹிட்டாக போகின்றது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது. இவ்வேளையில், நேற்று மாலை வெளியான வாரிசு படத்தின் டிரெய்லருக்கு பல கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அந்த டிரெய்லர் காட்சி புதிய சாதனையைப் படைத்திருக்கின்றது. அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது .