
ஈப்போ ஆக 22- பேரா மாநில அளவில் சுல்தான் மற்றும் நாட்டிற்கு விசுவாசத் வெளிப்படுத்தும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் ஈப்போ ராஜா பெரும்புவான் தேசிய பள்ளியைச் சேர்ந்த காயத்திரி ரவிந்தரன்( வயது 11) இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார். ஈப்போவில் உள்ள பேரா அரசாங்க செயலக மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற பேரா சுல்தான் நஸ்ரின் ஷாவிடமிருந்து காயத்திரி பரிசினை பெற்றார். இந்தப் போட்டியில் 79,807 மாணவர்கள் பங்கேற்றனர் , அவர்களின் காயத்திரியின் போஸ்டர் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற அவரது( காயத்திரி) 10 வயது சகோதரி நெஹா ரவிந்தரன் 5வது இடத்தைப் பிடித்தார்.
இந்த நிகழ்வில் பேரா ராஜா மூடா, கல்வி அமைச்சர், தகவல் தொடர்பு அமைச்சர், பேராக் மந்திரி புசார், ஆகியோரும் கலந்துக் கொண்டனர். பேரா மாநில அரண்மனையுடன் பேராக் கல்வித் துறையால் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் நாட்டிற்கும் விசுவசமாக விளங்கும் வகையில் இருக்க பேச்சுப் போட்டிகள், கட்டுரைகள் கவிதைகள் எழுதுதல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டது. பள்ளியில் தலைமையாசிரியர் , வகுப்பு ஆசிரியர் மற்றும் தனது பெற்றோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஓவியத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றதாக காயத்திரி தெரிவித்தார். இம்மாணவியின் தாயார் புனிதவிழி ஒரு கலை ஆசிரியர் ஆவார், அவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.