Latestஇந்தியா

ஓ. பன்னீர்செல்வம் அவரது மகன் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவு

சென்னை, ஜன 10 – கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும்,
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், உண்மையான சொத்து விவரங்களை மறைத்து பொய்யான தகவல்களை தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதையடுத்து, அவ்விருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தும்படி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!