கோலாலம்பூர், பிப் 15- பெர்லிசில் உள்ள சமய அமைப்பின் பரமாரிப்பில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்ட Loh Siew hong – கின் பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக, பினாங்கு துணை முதலைமைச்சர் பி. ராமசாமி தெரிவித்தார்.
பினாங்கு,பாயான் லெபாசில் , இஸ்லாமிய அரசாங்க சார்பற்ற அமைப்பை நடத்தி வரும், மதம் மாறிய நசிரா நந்தகுமாரி என்பரால் , அந்த மூன்று பிள்ளைகளும் மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லீம் அல்லாத பிரச்சனையுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்களையும், சிறுவர்களையும் அந்த பெண் மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
இவ்வேளையில், மீட்கப்பட்டு சமூக நல இல்லத் துறையின் கவனிப்பில் வைக்கப்பட்டிருக்கும் அந்த 3 பிள்ளைகளின் தந்தையான நாகேஸ்வரன் முனியான்டி , போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு, தற்போது சிறையில் இருப்பதாகவும் பி. ராமசாமி தெரிவித்தார்.