
ஜோகூர் பாரு, மார்ச் 30 – 8 கொள்கலன்கள் நிறைய கடத்தப்பட்ட மதுபானங்களை நாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சி முறியடிக்கப்பட்டது. ஜோகூர் சுங்கத்துறை, சுங்கை பூலாய் சுங்க மெரின் அமலாக்க பிரிவினர் 5.16 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மதுபானங்களை பறிமுதல் செய்தனர். அந்த கொள்கலனில் இயந்திரத்திற்கான உபரி பொருட்கள் இருப்பதாக போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த கொள்கலன்களில் இருந்த அனைத்தும் மதுபானங்கள் என்பதை அறிந்து சுங்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் ஜோகூர் மாநில சுங்கத்துறையின் இயக்குனர் Misbahudin Parmin தெரிவித்தார்.