
மூவார், நவ 1 – பாகோ, ஜாலான் செங்காங்கிலுள்ள கிடங்கு ஒன்றில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும்
700,000 ரிங்கிட் மதிப்புள்ள மது பானங்களை பறிமுதல் செய்தனர். அந்த மதுபானங்களை கடத்தும் கும்பலைச் சேர்ந்த 37 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதை மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ராய்ஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் உறுதிப்படுத்தினார். அந்த நடவடிக்கையின்போது 859 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு முத்திரைகளைக் கொண்ட மது பானங்கள் இருந்ததாக அவர் கூறினார். கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கான சோதனை நடவடிக்கை குறிப்பாக மூவார் வட்டாரத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ராய்ஸ் முக்லிஸ் தெரிவித்தார்.