கோலாலம்பூர், ஜூலை 17 – எண்ணெய் கடத்தல்காரனை துரத்திச் சென்ற போது விபத்துக்குள்ளாகிய போலீஸ் அதிகாரி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார்.
சம்பவத்தின் போது, மோட்டார் சைக்கிளில், சந்தேகத்திற்குறிய காரைத் துரத்திச் சென்றபோது, அந்த காரால் அந்த போலீஸ் அதிகாரி மோதித் தள்ளப்பட்டார்.
விபத்தில் 31 வயதான koperal பதவி கொண்ட அந்த அதிகாரிக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதோடு, மண்டை ஓடும் உடைந்தது.
உடனடியாக கெடா, கூலிம் (Kulim) மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த அதிகாரிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என கூலிம் மாவட்ட போலீஸ் அதிகாரி Mohd Redzuan Salleh தெரிவித்தார்.
முன்னதாக துரத்திச் செல்லப்பட்ட ஆடவனைப் போலீசார் கைது செய்திருப்பதோடு, அவன் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்ததாக அவர் கூறினார்.