Latestஉலகம்

கடத்தல் – கொலை குற்றச் செயல்களில் எங்களுக்கு தொடர்பு இல்லை பிள்ளையாண்டன் தகவல்

கொழும்பு, ஜூன் 26 – தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவங்களில் தங்கள் இயக்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லையென தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிள்ளையாண்டான் தெரிவித்தார். நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் உறுப்பினர்கள் இப்படியொரு தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். பல்வேறு குற்றச்சசெயல்களில் தங்களது இயக்கம் ஈடுபட்டு வருவதாக பத்திரிகையில் வெளியான செய்தியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையாண்டான் மறுத்தார். இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் அடைக்கலமாகும் எவரும் பொய்யான குற்றச்சாட்டை எழுப்ப முடியும் என அவர் தெரிவித்தார். ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல் மூலம் நாங்கள் தேர்வுபெற்றுள்ளோம் . எனவே எங்களை பழிசுமத்தும் பொய்யான குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறோம் என பிள்ளையாண்டான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!