Latestமலேசியா

கடத்தல் மதுபானங்களை விற்பனை செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், மே 22 – அண்டை நாட்டிலிருந்து கடத்தப்பட்டு வந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளை விற்பனை செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது. ஜோகூர் பக்ரியிலுள்ள பாரிட் ஜாவாவில் Seri Menanti யில் ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கும் கூடுதலான மதிப்பைக் கொண்ட மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களை பறிமுதல் செய்ததாக மூவார் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Raiz Mukliz Azman Azis தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்வீட்டில் நள்ளிரவு மணி 12.10 அளவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த கும்பலுக்கு இடைத் தரகராக செயல்பட்ட 56 ஆடவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அந்த வீடு கடத்தப்பட்ட மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுக்களை பதுக்கி வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அந்த நடவடிக்கையின்போது 72 போட்டல்களைக் கொண்ட மதுபானங்கள், 1,631 பொட்டலங்களைக் கொண்ட சிகரெட்டுகள் ஆகியவவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக Raiz Mukliz தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!