
கடந்தாண்டின் நான்காம் காலாண்டில், நாட்டில் அன்றாடம் சராசரியாக எட்டு கோடியே 40 லட்சம் இணைய தாக்குதல்கள் பதிவுச் செய்யப்பட்டன.
அதனை, உலகளாவிய இணைய பாதுகாப்பு தீர்வு வழங்குநரான Fortinet தெரிவித்தது.
இணைய வைரஸ்கள், Botnets இணைய தொடர்பு சாதனங்கள், அல்லது ஊடுருவல்கள் ஆகியவை அந்த தாக்குதல்களில் அடங்குமென தென்கிழக்காசியா மற்றும் ஹாங் காங்கிற்கான Fortinet சுட்டிக்காட்டியது.
அதனால், இவ்வட்டாரத்தில், இணைய தாக்குதல்களால் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள கூடிய நாடுகளில் ஒன்றாக மலேசியா உருவெடுத்துள்ளது.
அதே சமயம், கடந்தாண்டின் நான்காம் காலாண்டில், உலக அளவில், நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் கோடி இணைய தாக்குதல்கள் பதிவுச் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.