Latestமலேசியா

கடந்தாண்டு 4.1% அரசுப் பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை கைவிட்டுள்ளனர் – சாம்ரி

கோலாலம்பூர், நவம்பர்-15 – கடந்தாண்டு மட்டும் 4.1 விழுக்காடு உள்நாட்டு பொது உயர் கல்விக் கூட மாணவர்கள் MyMohes பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகப் பருவத் தேர்வில் தோல்வி கண்டதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதும், பட்டப்படிப்புக்கு வாய்ப்புக் கிடைத்தும் பதிந்துக் கொள்ளத் தவறியதுமே அதற்குக் காரணம் என உயர் கல்வி அமைச்சு (KPT) கூறியது.

சொந்த காரணங்களால் படிப்பை நிறுத்தியவர்கள், படிப்பைத் தொடர ஆர்வமில்லாதவர்கள், பட்டப்படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாதவர்கள், பணப்பிரச்னையை எதிர்நோக்கியவர்களும் அவர்களில் அடங்குவர் என, அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் (Datuk Seri Dr Zambry Abdul Kadir) தெரிவித்தார்.

அவ்விவகாரத்தைக் கையாள, பொது உயர் கல்விக் கூடங்களுடன் இணைந்து KPT சில கல்வி சார் மற்றும் கல்வி சாரா நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பிரச்னையை எதிர்நோக்கும் மாணவர்கள் கல்வியைத் தொடர ஏதுவாக அவர்களின் பட்டப்படிப்பை மாற்றியமைப்பது, buddy system முறையிலான ஆலோசகச் சேவை வழங்குவது, mentor-mentee திட்டத்தை அமுல்படுத்துவது ஆகியவையும் அவற்றில் அடங்குமென்றார் அவர்.

B40 குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் சுமையைக் குறைக்க, KPT பல்வேறு உதவிகளை வழங்கி வருவதையும், மக்களவைக்கு அளித்த பதிலில் அவர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!