Latestமலேசியா

கடந்தாண்டு 50,000-க்கும் மேலான சாலைப் பள்ளங்கள் சரிசெய்யப்பட்டன – பொதுப் பணி அமைச்சு

கோலாலம்பூர், பிப்ரவரி-6 – நாடு முழுவதும் கூட்டரசு சாலைகளில் 50,000 க்கும் மேற்பட்ட பள்ளங்கள் கடந்தாண்டு சரிசெய்யப்பட்டன.

அவற்றில், தீபகற்பத்தில் உள்ள கூட்டரசு சாலைகளில் சுமார் 3,955 பள்ளங்களும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் உள்ள சாலைகளில் 51,949 பள்ளங்களும் இருந்ததாக பொதுப் பணி அமைச்சு கூறியது.

ஆண்டு முழுவதும் பராமரிப்புப் பணிகளை நடத்துவதன் மூலம் கூட்டரசு சாலைகள் எந்நேரமும் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதிச் செய்து வருவதாக, மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு தெரிவித்தது.

இணையம் வாயிலான முறையின் கீழ் பள்ளங்கள் கண்காணிக்கப்படுகின்றன; அடையாளம் காணப்பட்டவுடன், 24 மணி நேரத்திற்கும் 3 நாட்களுக்கும் இடையில் பள்ளங்கள் சரி செய்யப்படுவதை அவ்வமைப்பு முறை உறுதிச் செய்கிறது.

அனைத்து பழுதுபார்ப்புகளும், பொதுப்பணித் துறையால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சு விளக்கியது.

சாலையில் தோன்றும் பள்ளங்களை சரிசெய்வது மற்றும் அது சரியான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்யும் முயற்சிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!