Latestமலேசியா

கடந்த கால தவறுகளில் பாடம் படித்துக் கொள்வீர் மலேசியன் ஏர்லைன்சிற்கு அன்வார் வலியுறுத்து

சிப்பாங், ஏப் 26 – கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் படித்துக் கொள்ள வேண்டுமென மலேசியன் ஏர்லைன்ஸிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார். அழகான கட்டிடங்கள் மற்றும் பெரிய அலுவலகங்களைவிட சிறந்த நிர்வாகமும் நேர்மையும் மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டினார். 1990ஆம் ஆண்டுகளில் தாம் நிதியமைச்சராக இருந்தபோது மலேசிய ஏர்லைன்ஸின் தனியார்மய திடடத்தை சுற்றிலும் குறைந்த வெளிப்படைத்தன்மை இருந்ததால் அதனால் ஏற்படும் சாத்தியமான ஆபத்தை உணர்ந்ததாக அன்வார் தெரிவித்தார். Madani நிர்வாகத்தின் கீழ் சிறந்த நிர்வாக முறையும் தெளிவான தூரநோக்கு சிந்தனையையும் தாம் எப்போதும் வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.

விடா முயற்சி ,சிக்கனம் மற்றும் நம்பிக்கைதான் நிர்வாகத்திற்கு முக்கியம், இதில் கவனம் செலுத்தி கடந்த கால அனுபவத்தை படிப்பனையாக எடுத்துக்கொண்டு தகவல்கள் கசிவதை தவிப்பதில் மலேசியன் ஏர்லைன்ஸ் கவனம் செலுத்த வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார். இந்த விமான நிறுவனத்தை முறையாக நிர்வகித்தால் அதன் பெருமையை உயர்த்த முடியும் என்பதை அனைத்துலக சமூகத்திற்கும் ,நாட்டிற்கும் மக்களுக்கும் நிருப்பிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் Academy மற்றும் அந்த விமான நிறுவனத்தின் Simulator மையத்தையும் தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!