
ஜோகூர்பாரு , மார்ச் 23 – மலேசிய அரசாங்கத்தின் எந்தவொரு தலைவர்கள் அல்லது கடந்த கால பிரதமர்களை ஒப்பிடுமையில் இப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன்தான் இணைந்து சிறப்பாக பணியாற்ற முடிவதாக ஜோகூர் சுல்தான் Ibrahim Iskandar தெரிவித்துள்ளார். ஜோகூர் மேம்பாட்டிற்காக அன்வாருடன் நல்ல ஒத்துழைப்புடன் பணியாற்ற முடிகிறது. அடிக்கடி சந்திப்பு மற்றும் தொலைபேசி வாயிலாக அழைத்து அன்வார் தம்முடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் சுல்தான் இப்ராஹிம் தெ ஸ்டார் நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அன்வார் மீது மலேசியர்கள் கொண்டுள்ள உயரிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அவர் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக புற்றுநோய்ப்போல் நாட்டில் வளர்ந்துவரும் லஞ்ச ஊழலை அகற்றுவதற்கு அன்வார் தலைமையிலான நடப்பு அரசாங்கம் கடுமையாக பாடுபட வேண்டும் என சுல்தான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.