Latestமலேசியா

கடந்த திங்கள் முதல் 486 டெல்தா தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர், ஜன 15 – கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையில் , நாட்டில் மொத்தம் 486 டெல்தா கோவிட் தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதனிடையே, இதுவரையில் நாட்டில் மொத்தம் 5, 726 டெல்தா தொற்றுகளும், 253 ஒமிக்ரோன் தொற்றுகளும், 233 Beta தொற்றுகளும், 14 Alpha வகை தொற்றுகளும் பதிவாகின.

மேலும், 13 Tetha வகை தொற்றுகளும், 4 Kappa வகை தொற்றுகளும், 3 Eta வகை தொற்றுகளும் அடையாளம் காணப்பட்டதாக , சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!