Latestமலேசியா

நெடுஞ்சாலை அவசரப் பாதையில் சண்டை; சிங்கப்பூர் ஆடவருக்கு RM5,500 அபராதம்

மூவார், பிப்ரவரி 14 – ஜோகூர், பாகோவிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை அவசரப் பாதையில், பிரம்பை பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆடவன் ஒருவனுக்கு ஐயாயிரத்து 500 ரிங்கிட் அபராதம் விதித்து மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

45 வயது சோ கியான் உய் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னதாக, 31 வயது கைருல் ஹுஸ்னி ஷா ஜமீல் என்பவருக்கு சொந்தமான தோயோத்தா போர்ட்சுனர் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, அவருக்கு ஈராயிரத்து ஐநூற்று இரண்டு ரிங்கிட் 35 சென் இழப்பை ஏற்படுத்தியதாக, சிங்கப்பூரில் டாக்சி ஓட்டுனராக பணிப்புரியும் சோ குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.

இம்மாதம் பத்தாம் தேதி, பிற்பகல் மணி 1.58 வாக்கில் அவன் அக்குற்றத்தை புரிந்தான்.

அச்சம்பவத்தை அடுத்து, இம்மாதம் 12-ஆம் தேதி, மாலை மணி 3.30 வாக்கில், பஹாங், கெந்திங் மலையில் அவன் கைதுச் செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!