அலோஸ்டார், மார்ச் 7 – கெடாவில் கோவிட் தொற்றுக்குள்ளாகி மரணம் அடைந்தவர்களில் 93. 4 விழுக்காட்டினர் பூஸ்டர் போட்டுக்கொள்ளாவதவர்கள் என மாநில சுகாதார இயக்குனர் டாக்டர் Othman Warijo தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி கடந்த சனிக்கிழமைவரை 152 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்தனர். இவர்களில் 142 பேர் பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்கள் என அவர் கூறினார்.
எனவே அனைத்து பெரியோர்களும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டோர் உடனடியாக Sinovac தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என Othman Warijo கேட்டுக்கொண்டார். மேலும் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான நோயாளிகள் பூஸ்டர் ஊசியை போட்டுக்கொள்ளும்படி அவர் வலியுறுதினார்.