Latestமலேசியா

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றுக்கு 1,576 பேர் பாதிப்பு – இருவர் மரணம்

கோலாலம்பூர், மார்ச் 18- நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,576 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். இதன்வழி இந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 330,042 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,996 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சைக்குப் பின் இதுவரை 314,457 பேர் சிகிச்சையிலிருந்து முழுமையாக குணமடைந்தனர் என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மருத்துவமனையில் இன்னமும் 14,360 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 151 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு 57 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட் தொற்றினால் இருவர் மரணம் அடைந்தனர். நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,225ஆகும்.

சிலாங்கூரில் மட்டும் 348 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். கோலாலம்பூரில் 175 பேரும், ஜோகூரில் 137 பேரும், பினாங்கில் 182 பேரும், பேராவில் 100 பேரும் , மலாக்காவில் 54 பேரும், நெகிரி செம்பிலானில் 41 பேரும், சரவாவில் 407 பேரும், சபாவில் 33 பேரும் தொற்றுக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!