Latestமலேசியா

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட SPM மாணவர்கள் ; தனி அறையில் தேர்வை எதிர்கொள்வார்கள்

குவாலா நெருஸ், ஜனவரி 30 – கோவிட்-19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனி அறையில் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

எஸ்.பி.எம் தேர்வெழுதும் இதர மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிச் செய்ய அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திரங்கானு கல்வி துறையின் இயக்குனர் ஜெலானி சுலோங் தெரிவித்தார்.

இதற்கு முன், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.எம். மாணவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வுகளில் தேர்வை எழுதும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது.

எனினும், இம்முறை தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதர மாணவர்களுடன் ஒரு சேர தேர்வை எதிர்கொள்வார்கள் என ஜெலானி சொன்னார்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வழக்கம் போல தேர்வெழுத வர வேண்டும். எனினும், தனி அறையில், கண்காணிப்பாளர் உதவியோடு, சம்பந்தப்பட்ட மாணவர் வசதியாக தேர்வெழுதுவது உறுதிச் செய்யப்படுமென ஜெலானி குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!