Latestஇந்தியா

கடன் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கிக்கு ஆடவன் தீ வைப்பு

பெங்களூரு, ஜன12 – கர்நாடா மாநிலத்தில் தனது கடன் விண்ணப்பத்தை வங்கி நிராகரித்ததைத் தொடர்ந்து அந்த வங்கிக்கு ஆடவன் ஒருவன் தீ வைத்தான். வசிம் ஹஷரட்சப் முல்லா என்ற அந்த நபர் இந்தியாவின் மத்திய பொருளகத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்தார். கடன் மனுவை அங்கீகரிப்பதற்கான தகுதியை பெறவில்லை என்று கூறி முல்லாவின் மனுவை அந்த வங்கி நிராகரித்தது. இதனால் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்த முல்லா ஞாயிற்றுக்கிழமை இரவு வங்கிக்கு சென்று அங்குள்ள கண்ணாடியை உடைத்து வங்கி அலுவலகத்தை சுற்றிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான்.

இதனால் வங்கியிலிருந்த ஐந்து கணினிகள் , மின்சார விளக்குகள், வங்கி சேமிப்பு புத்தகத்தை பிரிசுரிக்கும் கருவி, ரொக்கத் தொகைகளை எண்ணும் கருவி, பல்வேறு ஆவணங்கள், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரொக்க முகப்பிடங்களில் உள்ள பொருட்கள் உட்பட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததன. வங்கிக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டதையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!